Friday, February 3, 2012

கல்கி என்னும் அற்புதம் என்னை கட்டிப்போட்ட மாயம்

”கல்கி” உண்மையிலே ஒரு அற்புதம் தான். 12 வயதில் ஆரம்பித்த கல்கி மோகம் இன்று வரை மூன்று நாவல்கலுடன் சுற்றிசுழன்றுகொண்டிருக்கிறது. வரிக்கு வரி வாசகர்களை கட்டிப்போடும் ஒரு ஆற்றல் நூற்றுக்கு நூறுவீதம் அமையப்பெற்றவர் என்றால் அது கல்கிதான். 12 ஆவது வயதிலேயே கல்கி என் மீது ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை வேறு நூல்களை அதிகம் நாடவிடாது கல்கி என்ற ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றவிட்டதுதான்.

முதன்முதலில் நான் படித்த கல்கியின் வரலாற்று நாவல் “பொன்னியின் செல்வன்”. அது ஒரு தற்செயலான சம்பவம் என்றுதான் சொல்லவேண்டும். அப்போது நாங்கள் வேலணையில் இருந்தோம். எங்கள் சித்தி யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அவர் வீட்டை காலி செய்தபோது நானும் கூடவே இருந்தேன். அப்போது சித்தி பல பழைய புத்தகங்களை எடுத்து வீட்டின் ஒரு மூலையில் போட்டுவிட்டு “ இந்த பழைய புத்தகங்களை மாநகரசபை குப்பை வண்டி வரும்போது அதில் ஏற்றிவிடுவோம்” என்று சொன்னார். அப்போது நான் சின்ன பையன் தானே. என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம் என அந்த புத்தகக்கட்டை, சித்தியின் பேச்சுகளுக்கிடையில் கிளறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கதைப்புத்தகம் கண்ணில் பட்டது. முன்புறமும் பின்புறமும் அட்டைகள் இல்லாமல் பல பக்கங்கள் கறையான் அரிக்கப்பட்டு இருந்தது. ஏதோ ஒரு கதைப்புத்தகம்.. படிக்கலாம் என்று எடுத்து வைத்துக்கொண்டேன்.

பின்னர் பல மாதங்களாக அது கவனிக்கப்படாமல் மேசையிலேயே இருந்தது. ஒரு நாள் எதேச்சையாக புத்தகத்தை கையில் எடுத்தேன். என்னவென்று சொல்வது ! அதுவரை இராமாயணம், மகாபாரதம் என்ற இதிகாசங்களுடனும் பத்திரிகைகளில் வரும் கார்டூன் கதைகளுடனும் வலம்வந்த எனக்கு, பொன்னியின் செல்வன் மிகப்பெரிய அற்புதம். அரைகுறையாக இருந்த முதலாம் பாகமே என்னை அடிமையாக்கிவிட அப்பாவிடம் அடம்பிடித்து பூபாலசிங்கம் புத்தகசாலையில் ஐந்து பாகங்களையும் வாங்கினேன்.

சில காலங்கள் பள்ளிப்புத்தங்களை ஓரம் வைத்துவிட்டு பொன்னியின் செல்வனுடன் உறவாடத்தொடங்கிவிட்டேன். கபடமில்லா வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன், பழிதீர்க்கும் வஞ்சத்துடன் அலையும் நந்தினி, “பொன்னியின் செல்வன்” அருள்மொழிவர்மன், அடிக்கடி மூர்ச்சையற்று விழும் வானதி, குந்தவி, ஆழ்வார்க்கடியான், கொள்ளிடக்கரை, பழுவேட்டரையர், பழையாறை என எனக்குள்ளேயே ஒரு உலகை சிருஷ்டித்து அவர்களுடன் சஞ்சரிக்கத்தொடங்கினேன். அதன் பலன் அடுத்து வந்த பாடசாலை பரீட்சையில் கோட்டை விட்டேன்.

பொன்னியின் செல்வனின் தாக்கம் கல்கியின் எழுத்து மீதான காதலை அதிகரிக்க கல்கியின் நூல்களை தேடத்தொடங்கினேன். சோலைமலை இளவரசி, அலை ஓசை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. இருந்தாலும் வரலாற்று நாவல்கள் மீதான அதீத ஈர்ப்பால் பொன்னியின் செல்வனுக்கு பிறகு “சிவகாமியின் சபதம்”  அதிகமாக என்னை ஆட்கொண்டது. வரலாற்று நாவல் என்பதோடு மாமல்லனுக்கும் சிவகாமிக்கும் இடையிலான அற்புதமான காதலை சொன்ன நாவல் என்பதால் பொன்னியின் செல்வனை விட அதிகம் என்னை கவர்ந்தது.

மாமல்லனும் சிவகாமியும் காதல்கொள்ளும் குள்ளத்தருகில் நானும் கூட இருந்தேன், இருவரும் ஊடல் கொள்ளும்போது நானே தூது போயிருக்கிறேன், மகேந்திர பல்லவனுடன் மாறுவேடத்தில் சுற்றினேன், நாகநந்தி பிக்குவின் பின்னால் ஒற்றனாக அலைந்தேன், ஆயனரின் சிற்பக்கூடத்தில் எழும் உளி ஓசையில் என்னை மறந்தேன்,சிவகாமியின் நாட்டியத்தை மெய்மறந்து ரசித்தேன், வாதாபி படையெடுப்பில் மாமல்லனுடன் கைகோர்த்து போரிட்டேன்.. பல்லவ சைன்ய தளபதி பரஞ்சோதியுடன் அளவளாவினேன். மொத்தத்தில் அந்த நாவலுடனேயே ஒன்றித்துப்போனேன். இதுவரை ஆறு தடவைகள் படித்து முடித்துவிட்டேன். ஆனாலும் தாகம் தீரவில்லை. “சிவகாமியின் சபதம் காதலியின் கடிதம் போன்றது” திரும்ப திரும்ப படிக்கும்போது அதன் மீதான ஈடுபாடு கூடிக்கொண்டே போகிறது.

இதுவரை பொன்னியின் செல்வனை 11 தடவைகளும் சிவகாமியின் சபதம் 6 தடவைகளும் படித்துவிட்டேன். கல்கியின் எழுத்தின் மீதான காதல் வேறு நூல்களை நாட என்னை அனுமதிக்கவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபததுடனேயே கழிகிறது. அவப்போது வேறு நூல்களை படித்தாலும் அவற்றுடன் ஒன்றித்துபோகமுடியவில்லை. அரைவாசி படித்துக்கொண்டிருக்கும்போதே “ அட.. இது என்ன...... பொன்னியின் செல்வனை படிப்போம்” என மறுப்டியும் கல்கியுடன் சங்கமித்துவிடுவேன். கல்கியை தவிர நான் ரசிக்கும் இன்னொருவர் ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்கள்தான்.

”பொன்னியின் செல்வன்” நாவலை மணிரத்னம் திரைப்படமாக்க முயற்சித்தபோதே ஒரு வித ஆவல் என்னுள் பற்றிக்கொண்டது. அதிலும் பொன்னியின் செல்வன் நாவலில் எல்லோர் மனதையும் கொள்ளைகொண்ட வந்தியத்தேவன் பாத்திரத்தில் எனக்கு பிடித்த நாயகன் விஜய் நடிக்கப்போகிறார் என்றதுமே ஒருவித ஆவல் எழுந்தது. ஆனாலும் மறு புறத்தில் ஒரு பயமும் இருந்தது. காரணம் கல்கி எழுத்தில் சிருஷ்டித்த அந்த அற்புத உலகத்தை மணிரத்னத்தால் மட்டுமல்ல, வேறு எவராலும் காட்சிபுலத்தில் கொண்டுவரமுடியாது என்பதே. அப்படி அந்த திரைப்படம் வந்திருந்தால் கல்கியின் எழுத்துக்களால் எம் மனவுலகில் சிருஷ்டிக்கப்பட்ட அந்த அற்புத பூமி நிச்சயம் சிதைக்கப்பட்டிருக்கும்.


குறிப்பு: நண்பர்களே! என் தளத்தில் இருந்து ஓட்டுப்பட்டைகள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டேன். அது இருக்கும்வரை எனக்கும் பளு, ஏனையவர்களுக்கும் பளு. அதோடு இந்த ஓட்டு, ஹிட்ஸ் எல்லாம் என்னத்துக்கு என்று தோன்றுகிறது. இவை இருக்கும்வரை எம்மை அடிமைப்படுத்திக்கொண்டே இருக்கும். ஹிட்ஸை தூக்கி எறிந்துவிட்டபடியால் இனி பிடித்த பதிவுகளுக்கு மட்டுமே படித்து பின்னூட்டமிடுவேன். நான் ஓட்டுப்பட்டைகள் இணைக்காவிட்டாலும் நண்பர்களின் பதிவுகளுக்கு ஓட்டளிப்பேன்.

Friday, January 6, 2012

வாத்தியார் பொண்ணுக்கு கலியாணமாம்!!

முன்குறிப்பு : இந்த சிறுகதை நான் பதினோராம் தரம் படிக்கும்போது ஒரு சிறுகதை போட்டிக்காக "வறுமையின் கோடுகள்” எனும் தலைப்பில் எழுதியது. அதிலும் காமடி என்னென்றா அந்த போட்டியில நான் மட்டும்தான் பங்குபற்றியிருக்கிறன் போல.... ஏனென்றா இந்த கதைக்குத்தான் மாவட்ட மட்டத்தில் முதலிடம்.. ஹி ஹி. பழைய பெட்டிகளை தட்டும்போது கிடைத்தது.. அப்பிடியே பதிவிட்டுட்டேன்........ 
---------------------------------------------------------------------------------------------------------------------
இன்று வழக்கின் இறுதி நாள். சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குற்றவாளிக்கூண்டு அவருடைய நாற்பது வருடகால ஆசிரியப்பணியின் செல்வாக்கை, கௌரவத்தை விழுங்கிக்கொண்டிருந்தது. “குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது மிஸ்டர் சுந்தரம்பிள்ளை. உங்கள் சார்பில் வாதாட யாரும் வக்கீல் உள்ளார்களா?

நீதிபதியின் ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு ஈட்டியாக அவரது காதுகளில் நுழைந்தது. பாவம்... அவர் என்ன செய்வார்! செய்யாத குற்றத்திற்காக அவர் தண்டனை அனுபவிக்கப்போகிறார். அவர் மனம் அவர் குடும்பத்தினரை எண்ணி கலங்கியது.  அவருடைய சிறு வருமானத்தை மட்டுமே நம்பி, சிறு வயதிலேயே தாயை இழந்த திருமண வயதை அடைந்த மூன்று பெண்பிள்ளைகள் .... நினைக்க நினைக்க சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு தலை சுற்றியது. “என் சார்பில் வாதாட யாரும்.......” சொல்ல வாயெடுத்தார் மாஸ்டர்..

Monday, December 26, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம் 6 (இறுதி பகுதி)


இத்தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க வழிதேடும் சுவடுகள்
***************************************************************************************
“கதிர்… கெதியா போட்ட கரைப்பக்கம் திருப்பு.. அவங்கள் வாறதுக்குள்ள எப்பிடியும் கொஞ்ச தூரம் கரைய நெருங்கியிரலாம். கரைய அண்டி அவங்கள் வரமாட்டாங்கள்…” பாலன் அண்ணா படபடத்தார்.

எல்லாரும் திக்பிரமை பிடித்தவர்களாக செய்வதறியாது நின்றார்கள். ஒரு பிரச்சினையை கடந்து வருவதற்குள் அடுத்த பிரச்சினை.அப்பன்.. பிள்ளைகுட்டியளோட போற..... பார்த்துப்போ. கடல்ல போகேக்க ஆமிக்காரன் கண்டா சுட்டுப்போடுவானாம்.” வெளிக்கிடும்போது பக்கத்து வீட்டுக்காரர் சொன்னது கண்முன் வந்து நின்றது. மரணம்தான் நெருங்கி வருகிறது.. எனிமேல் விசுவமடுவும் இல்லை, யாழ்ப்பாணமும் இல்லை.. யாருமற்றவர்களாய் கடலிலேயே சாகப்போகிறோம்..

Thursday, December 22, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம் 5


தொடரின் முன்னைய பாகங்களை படிக்க வழிதேடும் சுவடுகள்
***************************************************************************************
“இப்பிடியே விட்டிட்டு போக மனமில்லாமல் கிடக்குது ஆச்சி..கிடங்கு ஒண்ட வெட்டி புதைச்சுவிடுவம்” பொன்னம்மா கிழவியும் சரியென்பதுபோல் தலையாட்டினார்.
“ஓமடாப்பா… இல்லாட்டி சீவன் இங்கினைக்கதான் அந்தரிக்கும்”
“ஓம் ஆச்சி”
ராசன் மாமா எடுத்துவந்த பலகைத்துண்டால் இருவரும் மண்ணை கிளற ஆரம்பித்தார்கள்.. மணல் மண்ணாகையால் அவ்வளவு சிரமமாக இல்லை. பதினைந்து நிமிடத்திலேயே அளவான கிடங்கு வந்துவிட்டது.

Sunday, December 18, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம் 4


இந்த பதிவின் முதல் பாகங்களை படிக்க
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கிலோமீற்றர் தூரம் படகை இழுத்தபடியே கடந்துவிட்டிருப்போம். திடீரென கமலா அத்தை வீரிட்டு கத்தினார். “என்ன நடந்தது!!?? என்ன நடந்தது!!?? எல்லோரும் பதறிப்போனார்கள்.

காரணம் கமலா அத்தை கர்ப்பிணி.ஏதாவது நடந்துவிட்டதோ என்று எல்லோரும் பதற கமலா அத்தை படகிற்கு எதிர்த்திசையில் கையை காட்டினார்...

திரும்பி பார்க்க அங்கே இரண்டு உடல்கள் அலையில் அடிக்கப்பட்டு வந்துகொண்டிருந்தது.....

ஒருகணம் எல்லோர் இரத்தமும் உறைந்துபோக, உடலியக்கங்கள் செயல் இழந்து, தலை விறைக்க அந்ததிசையை பார்த்தபடியே நின்றோம். இரண்டு, மூன்று நான்கு என்று அடுத்தடுத்து சடலங்கள் மிதந்து வந்தபடியே இருந்தது. பெண்கள், பிஞ்சுக்குழந்தைகள் யாருமே எஞ்சவில்லை.