தமிழ் சினிமாவின் இரு சிகரங்கள் மோதிக்கொள்ளப்போகிறார்கள்... ஆமாம் விஜய்- அஜித் இருவரது படங்களும் பல வருடங்களுக்கு பின்னர் ஒரே மாதத்தில்,இரு வாரகால இடைவெளியில் வெளிவரப்போகின்றன. அதுவும் இரண்டுமே அவரவர் ரசிகர்களினதும், ஏனைய சினிமா ரசிகர்களினதும் அதி உச்ச எதிர்பார்ப்புடன் வெளிவருபவை.
ஐந்து படங்களின் தொடர் தோல்விக்குப்பின்னர் காவலன் தந்த வெற்றியின் உற்சாகத்துடன் விஜயும், பில்லா என்ற பெரு வெற்றிக்கு பின்னர் ஏகன், அசல் என்ற இரு படுதோல்விப் படங்களை கொடுத்து எப்படியும் வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற வேகத்துடன் அஜித்தும் களத்தில் இறங்கிவிட்டார்கள்.
எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜனி -கமலுக்கு அடுத்தபடியான ஜோடிகள், விஜய் - அஜித் என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பின்னர் எத்தனையோ இளம் நடிகர்கள் போட்டிக்கு வந்துவிட்ட போதும் இவர்களுடைய படங்களுக்கு உள்ள ஓபனிங் வேறு யார் படத்துக்கும் இல்லை என்பதுதான் நிஜம். இருவரது படங்கள் ரிலீசாகும்போதும் திரையரங்கு பக்கம் சென்று பார்த்தால் புரியும், இருவரது ஓபனிங்கும். பால் ஊற்றப்படும் கட் அவுட்டுகள், தேங்காய் உடைப்புகள், அரங்கு நிறைந்த காட்சிகள் என திரையரங்கே திருவிழாக்கோலம் பூனும். ஓபனிங்கில் மாத்திரமல்ல, இன்றைய காலத்தில் ரஜனிக்கு அடுத்தபடியாக அதிக, அசைக்கமுடியாத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.
ஒரு புறம் குழந்தைகள் முதல், பெரியவர் வரை அனைவரது மனங்களையும் கவர்ந்த விஜய். தொடர்ந்து நன்கு படங்கள் தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கத்தில் நடித்துவந்தார். இதுதான் இன்று இவரை எதிர்ப்பவர்கள் விஜய்மேல் கூறும் குற்றச்சாட்டு. அதாவது விஜய் வளர்ந்தது தன் தந்தையின் இயக்கத்தில்தான் என்று. ஆனால் அவை எதுவுமே வெற்றியடையவில்லை.
விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய, அவரது முதல் வெற்றிப்படம் “பூவே உனக்காக” விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்தது. அதைவிட காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்றவை விஜயின் இன்றைய வெற்றிக்கான அடித்தளங்கள். பிரியமுடன், கன்னுக்குள் நிலவு ஆகிய இரு மாறுபட்ட , வித்தியாசமான பாத்திரத்தை ஏற்றதோடு நிறுத்திவிட்டு அதன் பின்னர் தனக்கான ஒரு பாதையை வகுத்து காதல், ஆக்ஸன் இரண்டிலும் வெளுத்து வாங்கி வருகிறார். இன்று ரஜனிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகர்களைக்கொண்ட ஒரேயொரு நடிகராக விஜய் மட்டுமே உள்ளார். தமிழ்நாட்டில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர் மன்றங்கள். கேரளாவில் ஒரு படி மேலே போய் விஜய்க்கு சிலை வைக்கும் அளவிற்கு ரசிகர் பட்டாளம். ஐந்து தோல்விப்படங்கள் கொடுத்தும் முன்னனி இடத்தை தக்கவைத்துக் கொண்டு அடுத்த ஒரு வெற்றியில் அந்த ஐந்து படங்கள் கொடுத்த தோல்வியை மறக்கடித்து மறுபடியும் தனக்கான முன்னனி இடத்தை நிலைனிறுத்தியுள்ள இளையதளபதி விஜயும்,
மறுபுறம், அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, திரைத்துறைக்குள் யாருடைய ஆதரவுமின்றி நுழைந்த அஜித். அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையாயினும் அப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. முன்னதாக 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி சிறந்த புதுமுகத்திற்கான விருதினையும் பெற்றுக்கொண்டார். ஆசை, காதல் மன்னன் ஆகிய படங்கள் இன்றும் பார்க்கத்தூண்டும் சிறந்த படங்கள். ஆசை அஜித்தின் முதலாவது வெற்றிப்படமாக அமைந்தது. தனது ஐந்தாவது படமாக ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு சிறிய வேடத்தை ஏற்றிருந்தார். அப்போது யாரும் அஜித் இந்தளவு பெரிய நடிகராக வருவார் என நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். வாலி,சிட்டிசன்,வில்லன்,வரலாறு, பில்லா என மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று மிகச்சிறப்பாக தன் திறமையை வெளிக்காட்டி வருபவர். விஜய்க்கு நிகரான ரசிகர்களை கொண்டவர்(அண்மையில் தனது ரசிகர் மன்றங்களை கலைத்து தான் நிஜத்திலேயே ஒரு ஹீரோ என்பதை நிரூபித்தவர்)
இருவரும் முதலில் மோதிக்கொண்ட காலப்பகுதி 2001 ஆம் ஆண்டு. விஜயின் ப்ரண்ட்ஸ் திரைப்படமும் அஜித்தின் தீனா திரைப்படமும் மோதிக்கொண்டன. இரண்டுமே பெரு வெற்றி பெற்ற படங்கள். விஜய் தன்னை காதல்,சென்டிமென்ட் ஹீரோவாகவும், அஜித் விஜய்க்கு நிகரான மாஸ் ஹீரோவாகவும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டார்கள்.
அதன் பின்னர் பரமசிவன் - ஆதி, ஆழ்வார் - போக்கிரி என மோதிக்கொண்டார்கள்.

இப்போது மோதப்போவது வேலாயுதம், மங்காத்தாவுக்காக
அதுவும் வெற்றி, தோல்விகள், அது தந்த வடுக்கள் என சகல விதத்திலும் பக்குவப்பட்ட நிலையிலேயே இருவரும் மோதப்போகிறார்கள். கட்டாயம் இந்த மோதல் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே இருக்கப்போகிறது. காரணம் விஜயும் சரி, அஜித்தும் சரி, தம்மை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். தவிர வேலாயுதம் இயக்குனர் ராஜாவிற்கும், மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் இறுதிப்படங்கள் தோல்வியே. ஆகவே இருவரும் தங்களை நிரூபிக்கவேண்டிய்ட தேவை உள்ளது.
மங்காத்தா vs வேலாயுதம்
வேலாயுதம் பற்றி பார்த்தால், இதன் இயக்குனர் ஜெயம் ராஜா.ஜெயம்,உனக்கும் எனக்கும், எம்.குமரன்,சந்தோஷ் சுப்பிரமணியம் என்று வரிசையாக தெலுங்கு படங்களை தமிழில் எடுத்து தொடர் ஹிட் தந்த ஜெயம் ராஜா முதன்முதலில் சொந்தக்கதையை (தெலுங்கு ஆசாத்தின் தழுவல்) அதுவும் தனது தம்பியை விடுத்து விஜயை வைத்து இயக்குகிறார்.
இந்த படத்தின் ப்ளஸ் பொயிண்ட் என பார்த்தால்
இதன் இயக்குனர் ஜெயம் ராஜா ஏற்கனவே பல வெற்றிப்படங்களை கொடுத்த, எதிர்பார்ப்பு நிறைந்த இயக்குனர். விஜய் ஆண்டனி இசை என்பதால் நிச்சயம் பாடல்கள் ஹிட்டாகும் என எதிர்பார்க்கலாம். தவிர விஜயின் அதிரவைக்கும் டான்ஸ் இப்படத்தில் சற்று கூடுதலாகவே எதிர்பார்க்கலாம். அத்துடன் விஜயின் ஆக்ஷன், சந்தானம் காமடி, ஜெனிலியா, ராஜாவின் வேகமான திரைக்கதை என்பன படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விடயங்கள்.
படத்தின் மைனஸ் பொயிண்ட் என பார்த்தால், விஜய் தொடர்ந்து ஆக்ஷன் படங்களின் மூலம் தோல்வியை கொடுத்த பின் காவலன் என்ற காதல் கதையை கொடுத்தார். அது வெற்றி பெற்ற வேகத்தில் மறுபடியும் ஆக்ஷன் கதையில் இறங்கியுள்ளார். மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது அவரது மைனஸ் பொய்ண்ட்.
மங்காத்தா பற்றி பார்த்தால், இதன் இயக்குனர் வெங்கட்பிரபு தன் முதல் படமான சரோஜா என்ற வெற்றி படம் மூலம் அறிமுகமானவர். தனது நான்காவது படமாக அஜித்தை வைத்து மங்காத்தாவை இயக்குகிறார்.
இதன் ப்ளஸ் பொய்ண்ட் என பார்த்தால்
அஜித்தின் 50 ஆவது படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதைவிட திரிஷா, அர்ஜுன் போன்ற முன்னனி நட்சத்திரங்களும் உள்ளது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இதுவரை வந்த வெங்கட் பிரபு , யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எல்லாமே ஹிட் என்பதாலும், படத்தில் ஏற்க்கனெவே வெளியாகி சக்கை போடு போடும் விளையாடு மங்காத்தா பாடல் மேலும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட இப்போதே பேசப்படதொடங்கிவிட்ட அஜித்தின் நரைமுடி கெட்டப்.
இப்படத்தின் மைனஸ் பொய்ண்ட் என பார்த்தால், வெங்கட்டின் அனுபவம் மிகவும் குறைவு. இதுவரை மூன்று படங்களை இயக்கியபோதும் ஒன்று மட்டுமே வெற்றியாகியுள்ளது. தவிர வெங்கட்டின் படங்களில் படம் முழுவதும் ஒரு நகைச்சுவை இழையோடியிருக்கும். ஆகவே அது அஜித்துக்கு சரிவருமா என்பது கேள்விக்குறியே.
இதைவிட பிறேம்ஜியின் காமடி அஜித்துக்கு சரிவருமா என்பதும் கொஞ்சம் இடர்பாடான விடயம்.
இவை எல்லாவற்றையும் விட அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது அவருக்கு மிகப்பெரிய மைனஸ் பொய்ண்ட் என்றே பலரும் கருதுகிறார்கள்
ஆனால் விளையாடு மங்காத்தா படலின் ஹிட்டும், அதன் விற்பனையும் இதனை பொய்யாக்கிவிட்டது என்றே கூறலாம்
எப்படியோ ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது என்பது நிச்சயம்
நன்றியுடன்
மதுரன்

48 comments:
படம் ரிலீஸ் ஆகும்முன்பே படத்தைப் பற்றியும் இயக்குநர்கள், கலைஞர்கள் பற்றியும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டீர்களே.
எதிர்பார்ப்பை அதிகமாக்கிவிட்டீர்கள். அருமையான அலசல் நடுநிலையுடன். மிக நன்று.
வணக்கம் மதுரன்!
அருமையான அலசல்! படங்கள் வரட்டும் பட்டைய கெளப்பிடுவோம்! ஆமா மதுரனுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?
தலயா? தளபதியா?
ஹாரிஸ் ஜெயராஜுக்கு அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி!
வேலாயுதம் பாடல்களுக்காக வெயிட்டிங்!
என்ன தல தளபதி பதிவா???கடைய நடத்திருவீங்க தொடந்து??ஹிஹி சந்தானம் சிக்கினான் ஹிஹி
மவனே தளபதிக்கு சார்பா பெசாட்டிக்கு ஓட்டவடையும் நானும் சேர்ந்து தலையிலையே நொந்கேடுப்பம் ஹிஹி
எனக்கு தலையும் இல்ல தளபதியும் இல்ல தியேட்டர் சென்று படம் பாக்கிற பழக்கமும் இல்ல )))
மைனஸ் பிளஸ் எல்லாம் வேறுபடுத்தி பின்னி எடுத்திருக்கீங்க பொறுத்திருந்து பாப்பம்...
அசத்தல் பதிவு பார்ப்பம் யாரு வெல்லப் போவது என்று மாப்பூ!
என் எதிர்பார்ப்பு மங்காத்தவுக்குத்தான் மதுரன். நல்ல அலசல்
மக்காத்தாதான் கலக்கும் என்பது என் கணிப்பு, பட் வேலாயுதமும் காவலன் போல் ஓரளவு பார்க்ககூடிய அளவுக்கு இருக்கும் மதுரன்
பாஸ் நீங்க தல ரசிகனா ?? தளபதி ரசிகனா ??
( நான் நல்ல படங்களின் ரசிகன் என்று சொல்லுவீங்க என்று நினைக்குறேன் lol)
அருமையான அலசல்.........
இப்படிக்கு
என்னை பாலோ பண்ணினா உடனே உன்னை பாலோ பண்ணும் சங்கம்
தல படத்தை நல்ல விதமா சொன்னதால தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டேன்
ரைட்டு... நீங்க தல ரசிகர்ந்னு தெரியுது..
தலையா? தளபதியா?
தலதன் வெல்வார்... இல்ல இல்ல தளபதிதான் வெல்வார்....
அதுசரி தளபதி தேர்தலுக்கு வந்தால் வெல்வாரா? தோற்பாரா?
/* இதுவரை மூன்று படங்களை இயக்கியபோதும் ஒன்று மட்டுமே வெற்றியாகியுள்ளது. */
இல்லை. வெங்கட்பிரபுவின் இரண்டு படங்கள் வெற்றி. சென்னனை 600028 மற்றும் சரோஜா! கோவா மட்டும் பரவாயில்லை என்ற அளவில் சென்றது!!
இந்த தடவை மங்காத்தாலை வெங்கட்பிரபுவிற்காகவும் வேலாயுதத்தை ஜெனிலிலயாவிற்காகவும் அதிகம் எதிர்பாக்கிறேன்!
@கடம்பவன குயில்
நன்றி நன்றி
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வணக்கம் மதுரன்!
அருமையான அலசல்! படங்கள் வரட்டும் பட்டைய கெளப்பிடுவோம்! ஆமா மதுரனுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?
தலயா? தளபதியா?//
நமக்கு எப்பவுமே தளபதிதாங்க
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஹாரிஸ் ஜெயராஜுக்கு அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி!
வேலாயுதம் பாடல்களுக்காக வெயிட்டிங்!//
எனக்கு கூட விஜய் ஆண்டனியை பிடிக்கும் பாஸ்.. நானும் பாடலுக்கு வெயிட்டிங்
அடடா..அக்குவேறு ஆணிவேறாகப் பிரிச்சு மேஞ்சிருக்கீங்களே..கலக்கல் பதிவு.
இரு நடிகர்களின் படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பினை அதிகரிக்கும் வண்ணம் உங்களின் அலசல் அமைந்துள்ளது சகோ.
எனக்கு இவ் இருவர் மீதான மோகம் குறைவு..
படம் வரட்டும், யார் பிரகாசிக்கிறார்கள் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆமா அரசியல் பதிவுக்குத் தான் மைனஸ் ஓட்டுப் போடுறாங்க என்றால்,
இப்போ சினிமாப் பதிவிற்கும் கிளம்பிட்டாங்களா..
என்ன கொடுமை முருகா.
padataahthai nichchayamaaka paarkkiRoom...
alachalukku vaalththukkaL.
Venkat first film was chennai-600028
@மைந்தன் சிவா
என்ன தல தளபதி பதிவா???கடைய நடத்திருவீங்க தொடந்து??ஹிஹி சந்தானம் சிக்கினான் ஹிஹி//
ஹி ஹி ஹி
@மைந்தன் சிவா
மவனே தளபதிக்கு சார்பா பெசாட்டிக்கு ஓட்டவடையும் நானும் சேர்ந்து தலையிலையே நொந்கேடுப்பம் ஹிஹி//
அண்ணா நாம எப்பவுமே தளபதிதாங்ண்ணா..
@கந்தசாமி.
எனக்கு தலையும் இல்ல தளபதியும் இல்ல தியேட்டர் சென்று படம் பாக்கிற பழக்கமும் இல்ல )))///////
மனுசன் பிழைச்சிட்டாரு...
@கந்தசாமி.
மைனஸ் பிளஸ் எல்லாம் வேறுபடுத்தி பின்னி எடுத்திருக்கீங்க பொறுத்திருந்து பாப்பம்...//
ம்ம்... பார்ப்போம் பார்ப்போம்
@Nesan
அசத்தல் பதிவு பார்ப்பம் யாரு வெல்லப் போவது என்று மாப்பூ!//
நன்றி பாஸ்.... ரெண்டு பேருமே வெல்லுவாங்க என்று நம்புவோம்
@அசோக் குமார்
என் எதிர்பார்ப்பு மங்காத்தவுக்குத்தான் மதுரன். நல்ல அலசல்//
நன்றி பாஸ்..
மங்காத்தா நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புவோம்
@துஷ்யந்தன்
மக்காத்தாதான் கலக்கும் என்பது என் கணிப்பு, பட் வேலாயுதமும் காவலன் போல் ஓரளவு பார்க்ககூடிய அளவுக்கு இருக்கும் மதுரன்//
அஜித் ரசிகன்னு நிரூபிச்சிட்டீங்க பாஸ்
........
ஆஹா... மங்காத்தாவ மக்காத்தாவாக்கிட்டீங்களே பாஸ்???!!!!
@துஷ்யந்தன்
ஹி ஹி நான் தளபதி ரசிகன் பாஸ்...
அதுக்காக மத்தவங்கள பிடிக்காது என்றில்ல எல்லோரையுமே ரசிப்பன்.. தளபதிய கொஞ்சம் அதிகமா ரசிப்பன்..அவ்வளவுதான்
@ரியாஸ் அஹமது
அருமையான அலசல்.........
இப்படிக்கு
என்னை பாலோ பண்ணினா உடனே உன்னை பாலோ பண்ணும் சங்கம்//
ரொம்ப நன்றீங்கண்ணா
@தமிழ்வாசி - Prakash
தல படத்தை நல்ல விதமா சொன்னதால தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டேன்///
நன்றீண்ணா
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ரைட்டு... நீங்க தல ரசிகர்ந்னு தெரியுது..//
தலயயும் ஓரளவு பிடிக்கும் பாஸ்
@சந்ரு
தலையா? தளபதியா?
தலதன் வெல்வார்... இல்ல இல்ல தளபதிதான் வெல்வார்....
அதுசரி தளபதி தேர்தலுக்கு வந்தால் வெல்வாரா? தோற்பாரா?//
சொல்லமுடியாது பாஸ்... அது அவர் வர்ரப்போ இருக்கிற நிலமயை பொறுத்து (ஹி ஹி எப்பிடி எஸ்ஸு)
@கார்த்தி
/* இதுவரை மூன்று படங்களை இயக்கியபோதும் ஒன்று மட்டுமே வெற்றியாகியுள்ளது. */
இல்லை. வெங்கட்பிரபுவின் இரண்டு படங்கள் வெற்றி. சென்னனை 600028 மற்றும் சரோஜா! கோவா மட்டும் பரவாயில்லை என்ற அளவில் சென்றது!!
இந்த தடவை மங்காத்தாலை வெங்கட்பிரபுவிற்காகவும் வேலாயுதத்தை ஜெனிலிலயாவிற்காகவும் அதிகம் எதிர்பாக்கிறேன்!//
ஆமாம் தவறு நடந்துவிட்டது.. மன்னித்துவிடுங்கள்,
இரண்டுமே வெல்லும் பாஸ்.. உங்க நம்பிக்கை வீண்போகாது
@செங்கோவி
அடடா..அக்குவேறு ஆணிவேறாகப் பிரிச்சு மேஞ்சிருக்கீங்களே..கலக்கல் பதிவு.//
ரொம்ப நன்றி
@நிரூபன்
இரு நடிகர்களின் படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பினை அதிகரிக்கும் வண்ணம் உங்களின் அலசல் அமைந்துள்ளது சகோ.
எனக்கு இவ் இருவர் மீதான மோகம் குறைவு..
படம் வரட்டும், யார் பிரகாசிக்கிறார்கள் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.//
பாத்திரலாம் பாஸ்
@நிரூபன்
ஆமா அரசியல் பதிவுக்குத் தான் மைனஸ் ஓட்டுப் போடுறாங்க என்றால்,
இப்போ சினிமாப் பதிவிற்கும் கிளம்பிட்டாங்களா..
என்ன கொடுமை முருகா.//
விடுங்க பாஸ்.. மைனஸ் ஓட்டு வாங்குறதுதான் இப்போதைய ட்றெண்டாம்.. அப்பத்தான் பிரபலமாகலாமாம் என்று பேசிக்கிறாங்க.. ஹி ஹி
எனக்கு இது இரண்டாவது மைனஸ் ஓட்டு... அதுவரைக்கும் பரவாயில்ல
@vidivelli
padataahthai nichchayamaaka paarkkiRoom...
alachalukku vaalththukkaL.//
கட்டாயம் பாருங்க பாஸ்
@Kalai
Venkat first film was chennai-600028//
ஆமாங்க.. ஆமாங்கா சின்ன தவறு Sorry
இரு தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்துதான்
நல்ல பதிவு
நன்றி
அருமையான அலசல் பாஸ்
!!நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........!!
ஒருத்தரு உண்மைய சொல்லிபுட்டாரு...இன்னொருத்தரு இன்னும் பம்மிகிட்டு திரியிறாரு...இவர்களின் வளர்ச்சி எந்த வித நல்லதையும் நாட்டுக்கு கொடுக்கப்போவதில்லை!
Nice post! :-)
இரு பெரிய தலைகளின் மோதலல்லவா ? காத்திருப்போம்... ஆனால் இதிலும் எத்தனை காதில் மலர் சூடும் காட்சிகள் வரப் போகுதோ தெரியல...
Post a Comment