Wednesday, November 9, 2011

வழிதேடும் சுவடுகள் - பாகம்1

ஆடி முடிந்து ஆவனி மாதம் ஆரம்பமாகியிருந்தது.
ரியூசனில் இருந்தாலும் மனம்கொள்ளாத சந்தோசம் எனக்கு. “சனிக்கிழமை யாழ்ப்பாணம் போகப்போறம்” என்று அம்மா சொன்னது பழைய படங்களில் வரும் பிளாஸ்பேக் மாதிரி மனசுக்குள் றீல் சுத்திக்கொண்டிருந்தது.

நான் பிறந்தது யாழ்ப்பாணமாக இருந்தாலும் பிறந்த மறுநாளே என்னையும் தூக்கிக்கொண்டு ஓடத்தொடங்கி விட்டதாக அம்மா அடிக்கடி கூறுவார். வேலனை, திருநெல்வேலி, ஈச்சமோட்டை என்று தொடங்கிய ஓட்டம் இறுதியாக விசுவமடுவில்தான் முடிந்திருந்தது.

இந்த இடத்தில் விசுவமடுவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அங்கு வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும் அது ஒரு சொர்க்கபூமி என்று. எல்லையற்று விரிந்திருக்கும் வன்னிப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓர் கிராமம்தான் விசுவமடு. நீர்வளம், நிலவளம் என்று வருடத்தின் 365 நாட்களும் விவசாயிகளுக்கு செல்வம் கொழிக்கும் பூமி அது.




தோட்டம்,தோப்பு,துரவு என்று அங்கு வாழ்ந்த ஒவ்வொருவருமே செல்வந்தர்கள். வீசவந்த காற்றுக்கூட விசுவமடுவின் வனப்பில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டதோ! அந்த மண்மேல் கொண்ட காதலால் தன் பருவ காலங்களையும் மறந்து வருடம் முழுவதும் அந்த மண்ணின் மைந்தர்களுக்காய் வீச ஆரம்பித்துவிட்டது.

எந்நேரமும் வீசிக்கொண்டிருக்கும் காற்றும், மெலிதான மண்வாசனையும் என அங்கு வாழ்ந்த மக்களை தன்னோடு சேர்த்து கட்டிப்போட்டிருந்தது அந்த மண். வெறும் கையுடன் சென்ற எம்மை வரவேற்று வாழ்வளித்த மண். கள்ளிக்காட்டுக்கு இதிகாசம் எழுதிய வைரமுத்து எங்கள் விசுவமடுவில் பிறந்திருந்தால் ஓராயிரம் இதிகாசங்களை எழுதி முடித்திருப்பார்.

சரி! இவ்வளவு அருமையான இடத்த விட்டு போறதில உனக்கென்ன சந்தோசம் என்று கேட்கிறீங்களா? வேறொன்றுமில்லை. முக்கியமா இரண்டு காரணம். ஒன்று யாழ்ப்பாணம் பற்றி அம்மா சொன்ன கதைகளை கேட்டு கேட்டு மனதில் உருவாக்கி வைத்திருந்த யாழ்ப்பாணம் என்ற பிம்பத்தை நேரில் பார்க்கும் ஆவல். அதாவது இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பதுபோல. அடுத்தது யாழ்ப்பாணம் போயிட்டா விமலா ரீச்சரிண்ட அடியில இருந்து தப்பீரலாம் எண்ட ஒரு நப்பாசை. அவ்வளவும்தான்.

இன்னும் இரண்டே நாள்தான். அப்பாவுக்கு பெரிதாக விருப்பம் இல்லாவிட்டாலும் அம்மா உறுதியாகவே நின்றார். காரணம் அப்போது வன்னியை பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த ”மலேரியா” காய்ச்சல். அதிலிருந்து பிள்ளைகளை காப்பாற்றவேண்டும் என்ற வேகமும், கூடவே யாழ்ப்பாணத்தில் இருந்த எமது வீட்டை இராணுவம் இடிப்பதாக வந்த செய்தியும் அம்மாவை யாழ்ப்பாணம் போவதென்ற முடிவில் இருந்து பின்வாங்க விடவில்லை.

இதற்கு முன்னரும் ஒரு தடவை யாழ்ப்பாணம் செல்வதற்கான முயற்சிகளை செய்திருந்தோம். முன்னர் யாழ்ப்பாணம் செல்வதற்கு உயிலங்குளம் வழியாக செல்ல புலிகளும் இராணுவத்தினரும் அனுமதித்திருந்தனர். ஆனால் எங்கள் கெட்டகாலம் நாங்கள் போனபோது இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கடற்சமரில் இராணுவத்தினரின் இரு படகுகள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. அதனால் யாழ்ப்பாணம் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்திருந்தனர்.

உயிலங்குளம் சந்தி

உயிலங்குளம் வழியான பயணம் தடைப்பட்டதில் அம்மா மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோதுதான் சந்திரன் அண்ணா எங்களுக்கு அறிமுகமானார். ஏற்கனவே சுவையூற்றில் அப்பாவிற்கு அறிமுகமானவர். தனக்கு தெரிந்த ஒருவர் சனத்தை யாழ்ப்பாணத்திற்கு கடலால் கூட்டிச்செல்வதாக கூறி அவரை எமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பயணத்திற்கு எல்லாம் ஆயத்தம். ஆக இப்போது எமக்கு முன்னால் இருப்பது இரண்டு பெரிய சவால்கள். முதலாவது 98 ஆம் ஆண்டுகளில் வன்னியில் இருந்து வெளியேறுவதற்கு புலிகளால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனால் அவர்களுக்கு தெரியாமல்தான் வெளியேறவேண்டும். எங்களுக்கு இருந்த பிரச்சினை என்னவென்றால் எமது வீட்டிற்கு அருகில்தான் காஸ்ரேவின் பேஸ் அமைந்திருந்தது ( விசுவமடு 12ம் கட்டை). அங்கிருந்தவர்கள் எல்லோருமே எங்களுக்கு நல்ல பரிச்சயம். எங்கள் வீட்டில் என்ன அசைந்தாலும் அவர்களுக்கு தெரிந்துவிடும்.

அடுத்தது கடல் வழி பயணம் மிகவும் ஆபத்தானது. பெரும்பாலான சமயங்களில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த இரண்டு விடயங்களையும் சமாளித்துக்கொண்டுதான் புறப்படவேண்டும். முதலாவது விடயம் சமாளித்துவிட்டால் சரி. ஆனால் இரண்டாவது ஆபத்து எக்கணத்திலும் நடக்கலாம்.

"என்ன அப்பன் அண்ண ஏதாவது விசேசமே? ஒரே அமர்க்களமா இருக்கு? வாழைக்குலை வெட்டவந்த குலதீபன் அண்ணா கேட்டார்.

”இல்ல தீபன் நாளையிண்டைக்கு புளியம்பொக்கனை போறம். அதுதான்....” அப்பாவின் சமாளிப்பு குலதீபன் அண்ணைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை என்பது அவர் தனது வேலையில் மூழ்கியபோதே தெரிந்துவிட்டது.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில இருந்தே குலதீபன் அண்ணா அந்த பேசிலதான் இருக்கிறார். நல்ல அண்ணைதான்... இருந்தாலும் அவருக்கு சொல்லாமல் மறைத்ததுக்கு காரணம் கட்டாயம் அவர் தன் இடத்தில் இருந்து கடமையை செய்திருப்பார். எங்கள் பயணம் அம்போவாயிருக்கும். இருந்தாலும் அப்பா எதேச்சையாக சொன்ன புளியம்பொக்கணை பிரயாணம் என்ற காரணம் பின்பு அவர்களை சமாளித்து வெளியேறுவதற்கு உதவியாக இருந்தது.

“அப்பன்.. பிள்ளைகுட்டியளோட போற..... பார்த்துப்போ. கடல்ல போகேக்க ஆமிக்காரன் கண்டா சுட்டுப்போடுவானாம். எதுக்கும் ஒருதரத்துக்கு இரண்டுதரம் முடிவெடு.. பிறகு நடுக்கடலுக்க போயிட்டு அல்லாடாத..”

வெளிக்கிடும்போதே ராசன் அண்ணை குசுகுசுத்தார்.

“டேய் சனியன். ஏண்டா அதுகள் வெளிக்கிடும்போது தரித்திரம் பிடிச்சமாதிரி கதைக்கிற” பொன்னம்மாக்கா ராசன் அண்ணையை திட்டிவிட்டு “அப்பன் நீ ஒண்டுக்கும் பயப்பிடாத.. ஏன் எங்கட செல்லம்மாக்கான்ர மூத்த பெடியன் போன வரியம்தானே போனவன்” என்று சமாளித்தார்.

புறப்படும்போது ஏற்பட்ட சிறு சலனம் அம்மாவிற்கு அடிமனதில் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தினாலும் வெளியில் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை.

தொடரும்.................

பேஸ் - புலிகளின் காம்ப்
வரியம் - வருடம்

41 comments:

மைந்தன் சிவா said...

good start contiue ::)

பிரெஞ்சுக்காரன் said...

மது ஓட்டுக்கள் போட்டிருக்கேன்! கமெண்டுபோட நைட்டுக்கு வர்ரேன்!

கந்தசாமி. said...

எழுத்து நடை என்னை கவருகிறது ..தொடருங்கள் ...

shanmugavel said...

சிறப்பான தொடக்கம்,பல வரிகள் சுகம்.தொடருங்கள்.

நிரூபன் said...

மது, புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்,

பதிவினைப் படித்து விட்டு பின்னர் வருகிறேன்.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள.. 
உங்களிடம் இருந்து இப்படி ஒரு எழுத்து நடையை நான் எதிர் பார்க்கவில்லை அருமை.. வாழ்த்துக்கள்!

காட்டான் said...

பொதுவாகவே தொடர்கதைகளை வாசிக்காத நான் நிரூபனின் தொடரையும் ராசுக்குட்டியின் தொடரையும் வாசித்து வருகிறேன். அந்த வரிசையில் உங்கள் தொடரும் நிச்சயம் இருக்கும் என் மனதில்..!!

காட்டான் said...

டெலிபோனில்தான் கொமொன்ஸ் போடுகிறேன் வீட்டுக்கு சென்று ஓட்டு போடுகிறேன்..

காட்டான் said...

அப்போ அந்த காலத்திலேயே பெரியவங்க கண்ணுல மண்ணை தூவீட்டிங்க..!!? ஹி ஹி ஏதோ நம்மால முடிஞ்சது.

காட்டான் said...

அப்போ அந்த காலத்திலேயே பெரியவங்க கண்ணுல மண்ணை தூவீட்டிங்க..!!? ஹி ஹி ஏதோ நம்மால முடிஞ்சது.

காட்டான் said...

யாழ்பாணத்தில இருந்துகொண்டு எழுதுறீங்க உங்கள் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தொடரை நகர்த்தி செல்லுங்கோ.. இஞ்ச நாங்க எப்படியும் கதைக்கலாம் உங்களுக்கு அப்படி இல்லைத்தானே உங்கள் எல்லைகளை புரிந்து கொண்டு எழுதுங்கோ.. 

 வாழ்த்துக்கள் மது!

தனிமரம் said...

புதிய தொடரில் பல விடயங்கள் அலசப்படும் என்ற ஆசையில் தொடர்கின்றேன் காத்திரமான தொடராக வர வாழ்த்துக்கள் மதுரன் உங்களின் இன்னொரு முகத்தினை இந்த எழுத்து நடை காட்டுகின்றது!

தனிமரம் said...

அம்போ என்று விட்டுட்டுப் போகும் வரியில் இருக்கும் சொல்லாடல் பலருக்கு புரியும் என்றாலும் சிலருக்கு வட்டார மொழி என்று என்னத்தைக் கொடுக்கும் இதை கொஞ்சம் இனி வரும் காலத்தில் சிறுகுறிப்பு போட்டுவிடுங்கள் மதுரன் .

உல்டா உலகநாதன் said...

சிறப்பான தொடக்கம்,பல வரிகள் சுகம்.தொடருங்கள்.:://

இக் கமெண்டை வழிமொழிகிறேன்.

துஷ்யந்தன் said...

மது கலக்கிட்டீங்க போங்க.......
ரியலி சூப்பர்வ்வ்வ்வ் மது..
சத்தியமாய் உங்களிடம் இருந்து இப்படி ஒரு எழுத்தை எதிர்பார்க்கவில்லை. மது இவ்ளோ திறமையை இவ்ளோ நாளும் எங்கே வைத்துகொண்டு இருந்தீர்கள்..!

எழுத்து நடை அருமை... ரசிக்கும் படி சம்பவங்களை நகர்த்துகிறீர்கள்... ஒவ்வொரு வரியும் அவ்ளோ அழகான தேர்ந்தெடுத்த சொற்களை கொண்டு கதை சொல்கிறீர்கள்... மது பிரமாதம்..

இன்னும் பாராட்ட நிறைய இருக்கு
ஆனால் நீங்கள் நன்பன் என்ற காரணத்தால் யாரும் தவறாக புரிந்து கொள்ள கூடாது என அடக்கி வாசிக்கிறேன்.. 

வரும் ஞாயிறு எங்கள் வீட்டில் ஒரு விழா நடக்க இருப்பது உங்களுக்கு தெரியும் தானே.. அதனால் ரெம்ப பிஸி.. பதிவு பக்கம் கொஞ்ச நாள் வராமல் இருக்க நினைத்தேன்..  உங்கள் தொடர் என்னை இழுத்து வந்துவிட்டது...

பிரிவான விமர்சன கலந்துரையாடலுக்கு வரும் செவ்வாய் வருகிறேன்... 
வாழ்த்துக்கள் மது ^_^

சத்ரியன் said...

மதுரன்,

சிறப்பான தொடக்கம். இருதினங்களின் இடைவெளியில் தொடரைத் தொடர்ந்து எழுதுங்கள்.

வாசிக்க ஏதுவாக இருக்கும்.

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

veedu said...

எழுத்துநடை அருமை தொடருங்கள் நண்பா....

K.s.s.Rajh said...

மது முதலில் வாழ்த்துக்கள் புதிய தொடர் அட்டகாசமாக இருக்கு

K.s.s.Rajh said...

ஈழத்து மண்வாசனை உங்கள் தொடரில் அப்படியே இருக்கின்றது எனக்கு கதையை வாசிப்பது போல இல்லை ஏதோ நண்பன் ஓருவனுடன் நேரடியாக கதைப்பது போல உள்ளது....

மீண்டும் வாழ்த்துக்கள் கலக்குங்க

K.s.s.Rajh said...

@
காட்டான் said...
பொதுவாகவே தொடர்கதைகளை வாசிக்காத நான் நிரூபனின் தொடரையும் ராசுக்குட்டியின் தொடரையும் வாசித்து வருகிறேன். அந்த வரிசையில் உங்கள் தொடரும் நிச்சயம் இருக்கும் என் மனதில்../////

அட மாம்ஸை தொடர்கதை வாசிக்க வைத்த பெருமை எனக்கும் இருக்கா.....

M.R said...

தொடக்கம் அருமை ,தொடர்ச்சியை படிக்க வருகிறேன்

த.ம 4

பாலா said...

அருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்...

கோகுல் said...

நல்ல வர்ணனையுடன்,அழகிய எழுத்துனடையுடன் ஆரம்பமாகியிருக்கிறது தொடருங்கள்.
வாழ்த்துக்கள்!

ஆகுலன் said...

அண்ணே அருமையா இருக்குது...தொடருங்கள்...மீளும் நினைவுகள்...

தமிழ்வாசி - Prakash said...

புது தொடரா? எழுதுங்கள் தொடர்கிறேன்...

கார்த்தி said...

ஆரம்பமே கலக்கல்தான்...

Yoga.S.FR said...

அருமையாக ஆரம்பித்திருக்கிறீர்கள்,தொடருங்கள்,தொடர்வேன்!!!

நிரூபன் said...

சனிக்கிழமை யாழ்ப்பாணம் போகப்போறம்” என்று அம்மா சொன்னது பழைய படங்களில் வரும் பிளாஸ்பேக் மாதிரி மனசுக்குள் றீல் சுத்திக்கொண்டிருந்தது.//

எனக்கும் இதே மாதிரியான அனுபவம் இருக்கு, அம்மா எங்கேயும் போகப் போறம் என்று சொன்னால் மனதினுள் கற்பனைக் கிளி சிறகடித்துப் பறக்கத் தொடங்கிடும்.

நிரூபன் said...

யாழ்ப்பாணம் போயிட்டா விமலா ரீச்சரிண்ட அடியில இருந்து தப்பீரலாம் எண்ட ஒரு நப்பாசை. அவ்வளவும்தான்.//

அடடா....இதுக்காகவா ஒரு செழிப்பான இடத்தை விட்டுப் போகனும் என்று நினைத்தீங்க.

நிரூபன் said...

இடர் அதிகமான கடல் வழிப் பயணத்தினைத் தொடங்குவதற்கு தயாராகுவதோடு இப் பாகத்தினை நிறுத்திருக்கிறீங்க.

தொடரின் ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் மது!

எழுத்து நடையும் அருமை.

அப்புறம் எமது வட்டார மொழிச் சொற்களை இத் தொடரில் புகுத்தியிருக்கிறீங்க.

மாய உலகம் said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

KANA VARO said...

மது வர்ணிப்பு எல்லாம் படு பிரமாதமா இருக்கே!

PUTHIYATHENRAL said...

தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

PUTHIYATHENRAL said...

தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

எஸ் சக்திவேல் said...

serious ஆன பதிவு. மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். விசுவமடுவில் நானும் ஓரிரு நாட்கள் தங்கியிருக்கிறேன்.

♔ம.தி.சுதா♔ said...

////யாழ்ப்பாணம் போயிட்டா விமலா ரீச்சரிண்ட அடியில இருந்து தப்பீரலாம் எண்ட ஒரு நப்பாசை./////

அடேய் மது அந்த ரீச்சருக்கு இப்ப ஒரு பொண்ணிருக்கடா விசுவமடு வாறியா?

♔ம.தி.சுதா♔ said...

மது மிகவும் உணர்வடன் ஜதார்த்தத்தை வெளிப்படையாகப் பதிவு காட்டுகிறது அருமை அப்படியே தொடரட்டும்...

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான எழுத்துநடை வாழ்த்துக்கள் மக்கா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

நானும் பாலோவர் ஆகிட்டேன்...

M.Shanmugan said...

அருமையா தொடர் ஆரம்பம், பரிச்சயமான உரையாடல்கள்