வணக்கம் நண்பர்களே
குறிப்பு: இது ஒரு எதிர்ப்பதிவு, நண்பர் துஷியந்தன் எழுதிய பாராட்டலாமே ஜெயலலிதாவை என்னும் பதிவுக்காக அவரது அனுமதியுடன் எழுதப்படுகின்றது
தமிழகத்தில் கொஞ்சக்காலமாகவே கருணாநிதி அலை ஓய்ந்து ஜெயலலிதாப்புயல் வீச ஆரம்பித்துள்ளது. பலரும் ஜெயலலிதாவை ஆதரித்தும் அவருக்கு எதிராகவும் தம் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். ஒரு சாரர் ஜெயலலிதா திருந்திவிட்டார், நல்லது செய்கிறார் எனவும் மற்றொரு சாரர் இல்லையில்லை ஜெயலலிதா திருந்தவில்லை எனவும் தம் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
