இத்தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க வழிதேடும் சுவடுகள்
***************************************************************************************
***************************************************************************************
“கதிர்… கெதியா போட்ட கரைப்பக்கம் திருப்பு.. அவங்கள் வாறதுக்குள்ள எப்பிடியும் கொஞ்ச தூரம் கரைய நெருங்கியிரலாம். கரைய அண்டி அவங்கள் வரமாட்டாங்கள்…” பாலன் அண்ணா படபடத்தார்.
எல்லாரும் திக்பிரமை பிடித்தவர்களாக செய்வதறியாது நின்றார்கள். ஒரு பிரச்சினையை கடந்து வருவதற்குள் அடுத்த பிரச்சினை.“அப்பன்.. பிள்ளைகுட்டியளோட போற..... பார்த்துப்போ. கடல்ல போகேக்க ஆமிக்காரன் கண்டா சுட்டுப்போடுவானாம்.” வெளிக்கிடும்போது பக்கத்து வீட்டுக்காரர் சொன்னது கண்முன் வந்து நின்றது. மரணம்தான் நெருங்கி வருகிறது.. எனிமேல் விசுவமடுவும் இல்லை, யாழ்ப்பாணமும் இல்லை.. யாருமற்றவர்களாய் கடலிலேயே சாகப்போகிறோம்..



